பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் 5.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. குஸ்தார் நகருக்கு அருகே ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் குறித்து அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தகவல் வெளியிட்டுள்ளது.
குஸ்தார் நகரிலிருந்து மேற்கு-வடமேற்கே 48 கி.மீ. தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல்கள் உடனடியாக வெளியாகவில்லை. கடந்த பிப்ரவரி மாதத்திலும் இதே மாகாணத்தில் 5.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அப்போது பூமிக்கு அடியில் 13 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் பதிவானது. அந்த நிலநடுக்கத்தால் பலுசிஸ்தானில் உள்ள சில பகுதிகளிலும், அண்டை மாகாணமான சிந்துவின் சுக்கூர், தாது உள்ளிட்ட மாவட்டங்களிலும் நில அதிர்வுகள் உணரப்பட்டன.பாகிஸ்தானில் 2005-ல் ஆண்டு ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் 74,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்தியா, அரேபியா, யூரேசியா ஆகிய நிலத்தட்டுகள் சந்திக்கும் பகுதியில் பாகிஸ்தான் அமைந்துள்ளதால், அங்கு அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.